சுட்டெரித்த வெயிலுக்கு 4 பேர் சாவு

சென்னை: சுட்டெரித்த வெயிலுக்கு மயங்கி விழுந்து 4 பேர் பலியாகினர். நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக 104 டிகிரி வெப்பநிலை பதிவானது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள விஆர்புரத்தை சேர்ந்தவர் சந்தானம் (82) என்பவர் நேற்று முன்தினம் வீடடில் இருந்து கடைவீதிக்கு சாலையில் நடந்து சென்றார். அப்போது வெயிலின் தாக்கத்தால் திடீரென மயங்கி விழுந்து பலியானார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 1305 படிகள் கொண்ட லட்சுமி நரசிம்மர் மலைக்கோயில் உள்ளது.

இங்கு கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த முத்துக்குமார் (47) என்பவர் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று வந்தார். பின்னர் 1305 படிகள் கொண்ட மலைக்கோயிலுக்கு படிகள் வழியாக ஏறிச்சென்றார். சுட்டெரித்த வெயிலின் தாக்கத்தோடு வியர்த்தபடி 1200 வது படியை கடந்தபோது முத்துக்குமார் திடீரென மயங்கி விழுந்து பலியானார். வேலூர் சைதாப்பேட்டை சுருட்டுக்கார தெருவை சேர்ந்தவர் தனபால் (60) என்பவரும், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே சின்னபுளியம்பட்டி கரடிகாமாட்சி தெருவை சேர்ந்தவர் ராஜாசங்கர் (44) என்பவரும் சுட்டெரித்த வெயிலால் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

The post சுட்டெரித்த வெயிலுக்கு 4 பேர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: