ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்

சென்னை: சென்னை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் 23 வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தினவிழா நிறுவனத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஆர்.எம்.கிஷோர், இயக்குனர் ஆர்.ஜோதி, ஆலோசகர்கள் எம்.எஸ்.பழனிச்சாமி, டி.பிச்சாண்டி, வி.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் என்.அன்புச்செழியன் அனைவரையும் வரவேற்றார். முனைவர் டி.ருக்மணிதேவி முதன்மை விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

விழாவில் நிறுவனத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் கல்வி, விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயங்கள், கோப்பை மற்றும் ரூ.35 லட்சம் ரொக்க பரிசுகளை வழங்கினார். அப்போது அவர் பேசும்போது, மாணவர்களின் கல்வி, கலை மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட ஏனைய நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்க செய்த ஆசிரியர்களையும், பணியாளர்களையும் பாராட்டுகிறேன் என்றார்.

துணைத் தலைவர் ஆர்.எம்.கிஷோர் பேசும்போது மாணவர்கள் அனைத்து கஷ்டங்களிலிருந்தும் விடுபட்டு உறுதியாக இருந்து அதிக சம்பளம் வழங்கும் நிறுவனங்களில் பணிபுரியும் அளவிற்கு நன்றாக படித்து தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில் திருச்சி நகைச்சுவை மன்ற செயலாளர் ஜி.சிவகுருநாதன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, ஆசிரியர்களால் புகுத்தப்பட்ட நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் இலக்குகளை அடைய வேண்டும். சிறந்த கற்பித்தல், கற்றல் சூழலுக்காக அதிநவீன உட்கட்டமைப்பை வழங்குவதன் மூலம் கல்லூரியின் மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்புக்காக கல்லூரி நிர்வாகத்தை பாராட்டுகிறேன் என்றார். முடிவில் கல்லூரி டீன் கே.கே.தியாகராஜன் நன்றி கூறினார்.

The post ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: