குடிநீர் திட்ட பணியின் போது இயற்கை எரிவாயு குழாய் சேதம்

வேளச்சேரி: தமிழகத்தில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் வழங்கும் பணிகளை ஏஜிமற்றும்பி பிரதம் நிறுவனம் செய்து வருகிறது. அதன்படி, பெரும்பாக்கத்தில் குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்கி வருகிறது. இந்த நிலையில் பெரும்பாக்கம், ஜெயா நகர் 9வது குறுக்கு தெருவில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக நேற்று பள்ளம் தோண்டினர்.

அப்போது, எதிர்பாராத விதமாக பூமிக்கு அடியில் ஏற்கனவே பதிக்கப்பட்டிருந்த இயற்கை எரிவாயு குழாயில் சேதம் ஏற்பட்டதால் கியாஸ் வெளியேறத் தொடங்கியது. இதுகுறித்து காஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், இந்நிறுவன ஊழியர்கள் விரைந்து வந்து, சேதமடைந்த குழாய்களை உடனடியாக சீரமைத்தனர். இதையடுத்து, அப்பகுதியில் எரிவாயு வினியோகம் சீரடைந்தது. பின்னர், இச்சம்பவம் குறித்து காஸ் நிறுவனம் சார்பில், பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

The post குடிநீர் திட்ட பணியின் போது இயற்கை எரிவாயு குழாய் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: