பகலில் வெயில் கொளுத்துகிறது; வேதாரண்யத்தில் அதிகாலை, இரவு நேரங்களில் உப்பு உற்பத்தி பணி

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதிகளில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக வேதாரண்யத்தில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு வெளிமாநிலம், வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் உப்பளங்களில் உப்பு உற்பத்தி பணி நடந்து வருகிறது. வழக்கத்தை விட கடந்த ஒரு மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடந்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேதாரண்யத்திலும் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் வெயிலில் இருந்து தற்காத்து கொள்வதற்காக இரவு, அதிகாலை நேரங்களில் தொழிலாளர்கள் உப்பு உற்பத்தி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post பகலில் வெயில் கொளுத்துகிறது; வேதாரண்யத்தில் அதிகாலை, இரவு நேரங்களில் உப்பு உற்பத்தி பணி appeared first on Dinakaran.

Related Stories: