ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு..!!

ஆந்திரா: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலத்தில் வரும் மே 13ம் தேதி தேர்தல் ஒரு கட்டமாக நடைபெற உள்ளது. இதனை ஒட்டி ரூ.50,000 மேல் கொண்டு செல்ல கூடிய பொருட்கள் மற்றும் பணம் உள்ளிட்டவை பிடிப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே 100க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் காரணமாக பல இடங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாக்காளர்களை கவருவதற்காக கொண்டு செல்லக்கூடியவற்றை போலீசார் மற்றும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அவ்வாறு ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபுரம் மாவட்டத்தில் பாமிடி அருகே கஜ்ராம்பள்ளி என்ற இடத்தில் போலீசார் இன்று வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அடுத்தடுத்து 4 கண்டெய்னர்கள் வந்தது அதனை நிறுத்தி சோதனை செய்த போது அதன் முன்புறம் போலீஸ் சின்னம் இருந்திருந்தாலும் கண்டெய்னர் என்று சந்தேகத்தின் காரணமாக அதனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் சுமார் ரூ.2000 கோடி பணம் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வருமான வரித்துறை மற்றும் போலீசார் உள்ளிட்ட உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்குள்ள ஆவணங்கள் அனைத்தையும் சோதனை மேற்கொண்டதில் இவை கேரளாவில் உள்ள 3 வங்கிகளுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதனை அடுத்து மொத்த ஆவணங்களையும் சரிபார்த்து இவை கேரளாவிலிருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு கொண்டு செல்வது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்போது அந்த 4 கண்டெய்னர்களையும் போலீசார் பாதுகாப்புடன் தற்போது அனுப்பிவைக்கும் பணியில் போலீசார் மற்றும் வருவாய் துறை, தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

The post ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: