கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்: கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு!

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே நடந்த கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு பிரிவினரை கோயில் திருவிழாவில் அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு. இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம்; கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு. கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு என அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் இன்று மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக முதலில் வாக்குவாதம்க் ஏற்பட்ட பிரச்சனை, பின்னர் மோதலாக மாறியுள்ளது.

இந்த மோதலின் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கோவில் திருவிழா நடைபெறும் இடத்தின் அருகே உள்ள கடைகள் மற்றும் வாகனங்களுக்கு மோதலில் ஈடுபட்டவர்கள் தீ வைத்ததால் அப்பகுதி கலவரம் நிறைந்த பகுதியாக காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது காவல்துறையினர் மீதும் கல் வீசப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து தீவட்டிப்பட்டி முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மேலும் மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர். மோதலின் காரணமாக கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது.

The post கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்: கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு! appeared first on Dinakaran.

Related Stories: