45 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரித்த வெயிலின் தாக்கம்; வெப்பமண்டலமாக மாறி வரும் கரூர் மாவட்டம்.. மக்கள் பீதி..!!

கரூர்: வெப்பமண்டலமாக மாறி வரும் கரூர் மாவட்டத்தில் மரம், செடி, கொடிகள் வளர்த்து பசுமை சூழலாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் பரமத்தியில் தினமும் 105 பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. நேற்று வரலாறு காணாத வகையில் 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி கரூர் மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் பொதுமக்கள், கூலி தொழிலாளிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் அச்சமடைந்துள்ளனர்.

எனவே கரூர் மாவட்டத்தை மரம், செடி, கொடிகள் வளர்த்து பசுமை சூழலாக மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 45 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்ற வெப்ப அலை வீசுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சாலைகளை விரிவாக்கம் செய்வதற்காக மரங்கள் வெட்டப்பட்டதால் வெப்பம் அதிகரித்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் மாவட்டத்தை பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post 45 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரித்த வெயிலின் தாக்கம்; வெப்பமண்டலமாக மாறி வரும் கரூர் மாவட்டம்.. மக்கள் பீதி..!! appeared first on Dinakaran.

Related Stories: