விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல் குவாரி வெடி விபத்து தொடர்பாக சேமிப்புக் கிடங்கின் உரிமையாளர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல் குவாரி வெடி விபத்து தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் உள்ள கடம்பன்குளத்தில் ஆவியூரைச் சேர்ந்த சேது மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் ஆகியோருக்கு சொந்தமான குவாரி மற்றும் கிர்ஷர் இயங்கி வருகிறது. வழக்கம் போல நேற்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குவாரியில் இருந்த வெடிமருந்து குடோனில் வெடிபொருட்களை வேனில் இருந்து இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வெடிபொருட்களில் உராய்வு ஏற்பட்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது.

இந்த வெடி விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த டி.புதுப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி (47), கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த துரை (25), குருசாமி (60) ஆகிய மூவரும் உடல் சிதறி உயிரிழந்தனர். சுமார் ஒரு கி,மீ வரை உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் சிதறி கிடக்கின்றன. மேலும், வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோன் முழுவதுமாக தரைமட்டமானது. இதேபோல் வெடிபொருள்கள் கொண்டுவந்த வேன் இந்த விபத்தில் உருக்குலைந்து. இந்நிலையில், குவாரி உரிமையாளர்கள் ராஜ்குமார் மற்றும் சேது ராமன் ஆகிய இருவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கல் குவாரி வெடிவிபத்து வழக்கில் உரிமையாளர் சேதுராமன் கைதான நிலையில் சேமிப்புக் கிடங்கின் உரிமையாளர் தற்போது ராஜ்குமார் கைது செய்யப்பட்டார்.

The post விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல் குவாரி வெடி விபத்து தொடர்பாக சேமிப்புக் கிடங்கின் உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: