பேட்டரி ஸ்ப்ரேயர் செயல்விளக்கம்

 

தேனி, மே 1: தேனி அருகே வீரபாண்டியில் மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவி பேட்டரி ஸ்ப்ரேயர் பயன்பாடு மற்றும் செயல்விளக்கம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவி சி.சந்தோஷினி தேனி அருகே வீரபாண்டியில் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பேட்டரி ஸ்ப்ரேயர் பயன்பாடு மற்றும் செயல்விளக்கம் அளித்தார்.

மேலும், பூச்சி தாக்குதலில் இருந்து கத்தரி செடிகளைஎவ்வாறு பாதுகாக்க வேண்டும், பூச்சி தாக்கிய கத்தரி செடிகளை எவ்வாறு பேட்டரி ஸ்ப்ரேயர் பயன்படுத்தி மருந்து தெளிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காட்டினார். அப்போது, 90 நாட்களான கத்தரி செடிகள் பூ பூத்த பின்னர் கத்தரி செடிகளை பூச்சிகள் தாக்க நேரிடும். அச்சமயம், போசலோன் 35 சதவீதம், இசி 1.5 மி.லி என்ற தடுப்பு மருந்து கலவையை பேட்டரி ஸ்ப்ரேயரில் பயன்படுத்தி எவ்வாறு பாதுகாக்க வேண்டும் எனவும் செயல்விளக்கமளித்தார்.

The post பேட்டரி ஸ்ப்ரேயர் செயல்விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: