காரைக்குடி, மே 1: காரைக்குடி மகர்நோன்பு திடலில் நற்பவிகிரியேட்டஸ்சின் சோட்டா பீம், டோராவின் குறும்புகள், அவெஞ்சர்களின் அட்காசங்கள் கொண்ட பொருட்காட்சி 3ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. இதுகுறித்து நற்பவிகிரியேட்டர்ஸ் ஸ்ரீகாந்த் கூறுகையில், பொருட்காட்சியை காரைக்குடி மாநகராட்சி மேயர் முத்துத்துரை துவக்கி வைக்கவுள்ளார். பொருட்காட்சி தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 வரை நடக்கும்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக காரைக்குடியில் சோட்டா பீம், டோரா, அவெஞ்சர்கள் பொருட்காட்சி நடத்தப்படுகிறது. இங்கு குழந்தைகளுக்கு படகு சவாரி, பலூன் விளையாட்டு, டோரா டேரா ராட்டினம், ஜெயின்ட் வீல் ராட்டினம், பிரோக்டான்ஸ் ராட்டினம், கோஸ்டல், கெலம்பஸ் ராட்டினம் மற்றும் 3டி ஷோ, பேய் வீடு, ஸ்னோ வேல்ட், மகாராஜா டிரைன், ஜீப், ஜம்பிங் உள்பட எண்ணற்ற விளையாட்டுகள் உள்ளன.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் குதூகலமாய் கொண்டாடி மகிழும் விதமான ராட்டினங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ் கிச்சன் பொருட்கள், ஸ்டேசனரி, டிரை புரூட்ஸ் என 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தவிர மதுரை ஜில்ஜில் ஜிகர்தண்டா, பாப்கார்ன், பஞ்சுமிட்டாய், ஜஸ்கிரீம் வகைகள் உள்ளன. குறைந்த விலையில் அதிக அளவிலான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன, என்றார்.
The post காரைக்குடி மகர்நோன்பு திடலில் சோட்டாபீம், டோரா, அவெஞ்சர்கள் பொருட்காட்சி: மேயர் 3ம் தேதி துவக்கி வைக்கிறார் appeared first on Dinakaran.