கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை: கலெக்டர் தகவல்

சென்னை: சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான சென்னை மாவட்டத்தில் செயல்படும் சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ம் ஆண்டு முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை முன்பதிவு நேற்று தொடங்கப்பட்டுள்ளது. செப்டம்பரில் தொடங்கும் பயிற்சி நடைபெறும் காலம் ஓராண்டு ஆகும். இரண்டு பருவமுறைகளில் பயிற்சி நடைபெறும் பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும். விண்ணப்பிப்பதற்கான தேதி, பயிற்சி கட்டண விவரங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்த விவரங்களை www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம், (சென்னை மத்திய கூட்டுறவு வங்கி தலைமையக வளாகம்), எண். 215, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை 600001. தொலைபேசி எண் 044-25360041 தொடர்பு கொள்ளலாம்.

The post கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: