சேப்பாக்கம் மைதானம் அருகே கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 8 பேர் கைது: 26 டிக்கெட்டுகள் பறிமுதல்


சென்னை: சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, பறக்கும் ரயில் நிலையம் ஆகிய பகுதியில் ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்றதாக தனித்தனியாக 8 வழக்குகள் பதிவு செய்து, சென்னை சுதந்திரா நகரை சேர்ந்த சரவணன்(20),

நவீன்குமார்(42), திருவல்லிக்கேணி அஜிஸ்முல் 2வது தெரவை சேர்ந்த அவுதாப் ஹாசன்(35), கோவை காளி(22), ஆயிரம் விளக்கு தினேஷ்குமார்(38), சிந்தாதிரிப்பேட்டை ப பரத்(22), திருவள்ளூர் மாவட்டம் ஜெ.ஜெ.நகர் கங்காதரன்(32), ராஜேஷ்(39) ஆகிய 8 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து ரூ72,242 மதிப்புள்ள 26 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post சேப்பாக்கம் மைதானம் அருகே கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 8 பேர் கைது: 26 டிக்கெட்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: