1 மணி நேரத்திற்குள் தொழில்நுட்ப வல்லுநரை அழைத்து ஸ்ட்ராங் ரூமில் பழுதான சிசிடிவி சரிபார்ப்பு: ஈரோடு ஆட்சியர் விளக்கம்

ஈரோடு: 1 மணி நேரத்திற்குள் தொழில்நுட்ப வல்லுநரை அழைத்து ஸ்ட்ராங் ரூமில் பழுதான சிசிடிவி சரிபார்க்கப்பட்தாக ஈரோடு ஆட்சியர் ராஜகோபால சுங்கரா விளக்கம் அளித்துள்ளார். நீலகிரியை தொடர்ந்து ஈரோடு தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என புகார் எழுந்தது. ஈரோடு தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோடு பகுதியில் உள்ள ஐஆர்டிடி அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.

நள்ளிரவு 12 மணிக்கு மேல் சுமார் 30 நிமிடங்கள் வரை சில கேமராக்கள் இயங்காததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஈரோடு தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி பழுதானது குறித்து, ஆட்சியர் ராஜகோபால சுங்கரா செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது பேசிய ஆட்சியர், ஸ்ட்ராங்க் ரூமில் மத்திய படை உட்பட 3 அடுக்கு பாதுகாப்பு உள்ளது.

200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் உள்ள நிலையில், ஒன்று மட்டும் பழுதானது. அனைத்து சிசிடிவிக்களையும், அரசியல் கட்சியினர் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எலெக்ட்ரானிக் என்பதால், பழுது ஏற்படுவது வழக்கம், எனவே அதிகளவில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. 1 மணி நேரத்திற்குள் தொழில்நுட்ப வல்லுநரை அழைத்து பழுதான சிசிடிவி சரிபார்க்கப்பட்டது. சிசிடிவி பதிவுகள் 3 மாதங்கள் வரை பத்திரமாக வைக்கப்படும் என தெரிவித்தார்.

The post 1 மணி நேரத்திற்குள் தொழில்நுட்ப வல்லுநரை அழைத்து ஸ்ட்ராங் ரூமில் பழுதான சிசிடிவி சரிபார்ப்பு: ஈரோடு ஆட்சியர் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: