பாஜ என்றால் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்ற நிலையில் ஒவ்வொரு வார்த்தையையும் பிரதமர் கவனமாக பேச வேண்டும்: தேமுதிக பொதுச் செயலாளர் பேட்டி

சென்னை: பாஜ என்றால் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்து இருக்கும்போது, பிரதமரின் வார்த்தைகள் உன்னிப்பாக கவனிக்கப்படுவதால் அவர் கவனமாக பேச வேண்டும், என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி நீர்மோர், பழங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கலாம். தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கை எடுத்தும் மக்கள் வாக்களிக்கவில்லை. நீலகிரி ஸ்டிராங் ரூமில் 4 மணி நேரம் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என்பது கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமரின் வார்த்தை ஒவ்வொன்றும் உன்னிப்பாக கவனிக்கப்படக்கூடியவை. அதனால் அவர் கவனமாக பேச வேண்டும். பாஜ என்றால் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்ற நிலை இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல் பதிவிலும் கவனமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பாஜ என்றால் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்ற நிலையில் ஒவ்வொரு வார்த்தையையும் பிரதமர் கவனமாக பேச வேண்டும்: தேமுதிக பொதுச் செயலாளர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: