தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம்..உக்கிர வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உதகையில் குவிந்த மக்கள்

உதகை: தமிழ்நாடு முழுவதும் கோடை வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் குளுவை நிலவும் உதகைக்கு மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். காலநிலை மற்றம் காரணமாக தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பெரும் மற்றம் ஏற்பட்டு வருகிறது. கோடையில் அதிக வெயிலும் மழைக்காலத்தில் அதிக மழைப்பொழிவும் பதிவாகின்றன. தற்போது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகியுள்ளது.

மக்களவை தேர்தல் கிளப்பிய அனலை விட கோடை வெயிலின் அனல் மக்களை ஓடி ஒளிய வைத்துள்ளது. தகிக்கும் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள ஓடிவந்த மக்களை நாடி வந்து குளிர்விக்கிறாள் மலைகளின் அரசி உதகை. மேட்டுப்பாளையத்திலிருந்து 51 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உதகை இந்த ஆண்டுக்கான கோடை குளு குளு சீசனில் மூழ்கியுள்ளது. உதகை தாவரவியல் பூங்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மலர் கண்காட்சிக்காக அங்குள்ள கண்ணாடி மாளிகையில் மலர் செடிகளை அடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அத்துடன் முதல் முறையாக 2 அரை டன் வண்ண கூழாங்கல் கற்களை கொண்டு வன விலங்குகளின் உருவங்களை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. கடல் மட்டத்திலிருந்து 2240 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள உதகை முழுவதும் குளுமையான காற்றோடு இதமான சூழல் நினைவுவதால் பல ஆயிரம் பேர் இங்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் தற்போதே உதகையில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது.

உதகையில் வந்து குவியும் சுற்றுலா பயணிகளுக்காக தாவரவியல் பூங்கா மட்டுமல்லாது, ரோஜா பூங்காவிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு மக்களுக்கு மட்டுமல்லாது.சர்வதேச கோடை வாழிடமாக உள்ள உதகையை மேலும் தூய்மையாக வைத்து கொள்வது பயணிகளின் கடமை. அதே நேரம் இங்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

The post தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம்..உக்கிர வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உதகையில் குவிந்த மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: