நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்: நாமக்கல் ஆட்சியர் அறிவுரை

நாமக்கல்: நாமக்கல் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததை அடுத்து நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில்:
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 23.4.2024 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டில் நாமக்கல் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் 23.4.2024 மற்றும் 24.4.2024 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

The post நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்: நாமக்கல் ஆட்சியர் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: