பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது; மோடியை தோற்கடிக்க மக்கள் முடிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: நாட்டின் யார் பிரதமராக யார் வரக்கூடாது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இந்த மக்களவை தேர்தல் இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரி தொகுதிக்கும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இன்று மாலையுடன் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்கிறது. தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் முக்கிய அரசியல் பிரமுகர்களின் பரப்புரையில் அனல் பறக்கிறது.

இந்நிலையில் ஆங்கில நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார். அப்போது; நாட்டின் யார் பிரதமராக யார் வரக்கூடாது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இந்த மக்களவை தேர்தல் இருக்க வேண்டும். இந்தியாவின் நம்பிக்கைக்குரிய இளம் தலைவராக ராகுல் காந்தி விளங்குகிறார். இந்தியா கூட்டணியை வலுப்படுத்தி தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கிறோம். பாஜகவை தோற்கடிப்பதற்கான வியூகங்களில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. 3-வது முறை பிரதமராக வேண்டும் என மோடி நினைக்கிறார். 2 முறை மோடியால் ஏமாற்றப்பட்ட மக்கள், இந்த முறை அவரை தோற்கடிக்க முடிவு செய்துவிட்டனர். 10 ஆண்டுகளாக ஜனநாயகத்துக்கும், பன்முகத்தன்மைக்கும் எதிராக ஆட்சி செய்து வந்தார் பிரதமர் மோடி. மத்தியில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர நாட்டு மக்கள் தயாராகிவிட்டனர். தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாப்பதில் ஏற்பட்ட தோல்வியை மறைக்கவே பாஜக கச்சத்தீவை கையில் எடுத்துள்ளது என்று கூறினார்.

The post பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது; மோடியை தோற்கடிக்க மக்கள் முடிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: