சென்னை: பல்கலைக்கழகத்துக்கான அரசு மானியத்தை ரூ.3 கோடியாக உயர்த்தி அடுத்த நிதியாண்டில் இருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மையம் மற்றும் நூலகம் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் பாடகி பி.சுசீலா, பி.எம்.சுந்தரம் இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்குவதன் மூலம் முனைவர் பட்டமே பெருமை கொள்கிறது என தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
The post பல்கலைக்கழகத்துக்கான அரசு மானியத்தை ரூ.3 கோடியாக உயர்த்தி அடுத்த நிதியாண்டில் இருந்து வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.