புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவன் தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்: போலீசார் விசாரணை


புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவன் தற்கொலை தொடர்பாக உறவினர்கள் மற்றும் சகமாணவர்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை அருகே விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணையா. இவர் நெடுஞ்சாலைத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரிகண்ணு. இவர்களுக்கு மகரஜோதி என்ற மகளும், மணிமுத்து மற்றும் மாதேஸ்வரன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

இதில் மாதேஸ்வரன் புதுக்கோட்டை தஞ்சை சாலையில் மச்சுவாடி அருகே உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வேளாண்மை பிரிவில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இதற்கிடையே மாணவன் மாதேஸ்வரன் தலைமுடி அதிகமாக வளர்த்து, தாடி வைத்து வந்ததால் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் பொழுது முடியையும் தாடியையும் வெட்டி விட்டு வருமாறு கூறி கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.

மாணவர்களை பள்ளியில் இருந்து 11.15 மணிக்கு வெளியில் அனுப்பி முடி சரியாக வெட்டிவிட்டு வரவேண்டும் என்று ஆசிரியர்கள் கூறியதாக சகமாணவர்கள் தெரிவித்துள்ளனர். அப்பொதுழுது சென்ற 3 மாணவர்களில் இரண்டு பேர் திரும்பி வந்து விட்டதாகவும் ஒருவர் மட்டும் வரவில்லை என்று தெரியவந்தது. அதன்பிறகு அந்த மாணவன் பள்ளிக்கு அருகில் இருக்கும் காட்டு பகுதியில் உயிரிழந்துள்ளார்.

இந்த மாணவரின் தற்கொலைக்கு ஆசியர்களின் அலட்சியம் தான் காரணம் என்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் மாணவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை அரசு முன்மாதிரி பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் புதுக்கோட்டை டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

The post புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவன் தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: