×
Saravana Stores

கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

ராமநாதபுரம், மார்ச் 28: ராமநாதபுரம் அருகே புத்தேந்தல் கிராமமக்கள் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, ‘‘புத்தேந்தல் கிராமத்தில் 800 குடும்பங்கள் உள்ளன. விவசாயம் மட்டும் பிரதான தொழிலாக நடந்து வருகிறது. இங்குள்ள சேட்டனேந்தல் கண்மாய் பாசனத்தில் சுமார் 400 ஏக்கர் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த கண்மாய்க்கு ராமநாதபுரம் பெரிய கண்மாயிலிருந்து உபரி தண்ணீர் வழங்க கால்வாய் உள்ளது. இந்த வரத்து கால்வாய் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ளது.
எனவே ஆக்கிரமிப்பினை அகற்றி, கால்வாயினை மீட்க வேண்டும். மேலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கால்வாய், கண்மாயினை மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியுள்ளனர்.

Tags :
× RELATED கூட்டுறவுத்துறை ஊழியருக்கு கொலை...