×
Saravana Stores

ஆதிதிராவிடர் மாணவர் விடுதி கட்டும் பணியை விரைந்து துவங்க வேண்டும்

சேத்தியாத்தோப்பு, மார்ச் 26:  சேத்தியாத்தோப்பு அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி, பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகம் அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக பழமையான கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்து வந்ததது. படுமோசமாக சிதிலமடைந்த நிலையில் விடுதியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வந்தனர். மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தில் மாணவர்கள் தங்கி படித்து வந்ததை சுட்டிகாட்டி தினகரன் நாளிதழில் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக விடுதியை காலி செய்து மாணவர்கள் தனியார் வாடகை கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டு கல்வி பயின்று வருகின்றனர்.  

இடிந்து விழும் நிலையில் இருந்து வந்த மாணவர் விடுதி கட்டிடத்தை சில நாட்களுக்கு முன்பு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. கட்டிட இடிபாடுகளை முழுவதும் அப்புறப்படுத்தபட்டு விடுதிக்கான இடம் திடலாக உள்ளது. ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் புதிய மாணவர் விடுதி கட்டுவதற்கான டெண்டர் விடபட்டும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்படாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளதால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விடுதிக்கான இடத்தை பார்வையிட்டு புதிய ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டிடபணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Adi Dravidar Student Hostel ,
× RELATED அம்மையார்குப்பத்தில் ஆதிதிராவிடர்...