×
Saravana Stores

சங்கராபுரம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு

சங்கராபுரம், மார்ச் 25: சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த சோலை மகன் அசலன் (55), இவர் கடந்த 18ம் தேதி விவசாய நிலத்தில் உள்ள புளிய மரத்தில் ஏறி புளியம்பழத்தை உலுக்கி கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி செல்வி சங்கராபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Shankarapuram ,
× RELATED கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சி