கல்வி வளர்ச்சி திட்டங்களுக்கு மக்களிடையே வரவேற்பு: அமைச்சர் பெருமிதம்

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திருவான்மியூர் சென்னை மேல்நிலைப்பள்ளியில், ‘உலகம் உங்கள் கையில்’ எனும் திட்டத்தின்கீழ், 4 கல்லூரி மாணவ-மாணவிகள் 1,627 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். இதை தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 6,92,471 மாணவிகளுக்கும், தமிழ்ப் புதல்வன் எனும் திட்டத்தின் மூலம் 5,40,429 மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 42 லட்சம் பேர் பயன்பெற்றிருக்கிறார்கள். நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. கல்வியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக திமுக அரசு செயல்படுத்துகின்ற திட்டங்கள் மக்களிடையே பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: