சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிக்கை: ஐரோப்பிய யூனியன் தலைவர் அந்தோனியா கோஸ்டா கடந்த 27ம் தேதி கையொப்பமிட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்தியாவுடனான ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மிகவும் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றது.
அண்மைக்காலமாக அமெரிக்க ஏகாதிபத்திய அரசின், ஆதிக்க உணர்வோடு அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்துவரும், உலக பொருளாதார சமநிலைக்கு எதிரானது. சமாதானத்திற்கும், சமன்பாட்டிற்கும் எதிரான முடிவுகளை புறக்கணிக்கும் விதமாகவும், எடுக்கப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியன் தலைவர் மிகவும் துணிவாகவும், சரியான நேரத்தில் எடுத்துள்ளார்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சரியான முடிவாகவும், பொருளாதார சமநிலை மற்றும் உலக மக்களின் நலன், வாழ்வுரிமை மற்றும் அனைத்து நாடுகளின் ஒருமித்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முழுமனதோடு வரவேற்கின்றது.
அமெரிக்க ஏகாதிபத்திய அதிபர் டிரம்ப்பின் முடிவுகளுக்கும், அமெரிக்க வர்த்தகப் போருக்கு எதிராகவும், கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் செயற்குழு கூட்டம் விரைவில் கூட்டப்பட்டு, ஆர்ப்பாட்டத்திற்கான தேதி அறிவிக்கப்படும்.
