பிப்ரவரி முதல் வாரத்தில் புதுச்சேரிக்கு ராகுல் வருகை: காங்கிரஸ் நடைபயணத்தில் பங்கேற்பு

புதுச்சேரி: பிப்ரவரி முதல் வாரத்தில் புதுச்சேரிக்கு ராகுல்காந்தி வர உள்ளார். புதுச்சேரி அரசின் செயல்பாடுகள், குறைபாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லும் வகையில் கடந்த 21ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் தொடங்கினர். புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 23 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று நெட்டப்பாக்கம் மற்றும் மங்கலம் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டனர். இன்று நடைபயணம் பிப்ரவரி 1ம்தேதி புதுச்சேரியின் சனி மூலையான காலாப்பட்டு தொகுதியில் நிறைவடைகிறது.

அதைத் தொடர்ந்து காரைக்கால் பிராந்தியத்தில் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அம்மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் மேற்கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், பொறுப்பாளர்கள் மேற்கொண்டுள்ளனர். சட்டசபை பொதுத்தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட நிர்வாகிகளை அழைத்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை கருத்துக்களை கேட்டறிந்தது.

தற்போது தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக டெல்லியில் ராகுல்காந்தியை, திமுக எம்பி கனிமொழி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், வருகிற 1ம்தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் புதுச்சேரி வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வரும் நடைபயணத்தை நிறைவு செய்யும் வகையில் பிப்ரவரி முதல்வார இறுதியில் ராகுல்காந்தி எம்பி புதுச்சேரி வரவும் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. அப்போது புதுச்சேரிக்கான தேர்தல் கூட்டணியை ராகுல்காந்தி இறுதி செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றன. இதுகுறித்து மாநில தலைமை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* கரூர் துயரம் (27.9.25) நடந்து 13 வது நாளில்…
9.10.25 அன்று குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘கூட்டணி தேவைதான். அதிமுக தலைமையில் அமைக்கும் கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கும். இதோ பாருங்க… கொடி பறக்குது(கூட்டத்தில் இருந்த அதிமுக தொண்டன் ஒருவர் தவெக கொடி தூக்கி காட்டுகிறார்). பிள்ளையார் சுழி போட்டாங்க…’’ என்றார்.

* 125 நாட்களுக்கு பிறகு….
நேற்று (29.1.26) ஓமலூரில் பேட்டியளித்த எடப்பாடி, ‘‘விஜய் சிறந்த நடிகர். ஆனால், சிறந்த அரசியல்வாதிகள் நாங்கள் தான். மக்களுக்கு சேவை செய்வது நாங்கள்தான். விஜய்க்கு என்னைபோல் அரசியல் பக்குவம் கிடையாது. திட்டமிடாமல் விஜய் போனதால் தான், 41 உயிர்கள் போய்விட்டது. இன்றைக்கு 41 குடும்பங்கள் அனாதையாகி விட்டது. 41 பேர் செத்த அப்போ ஏன் நேரில் போய் பார்க்கவில்லை’’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்..

Related Stories: