காரைக்கால், ஜன.27: காரைக்காலில் சைபர்க்ரைம் பிரிவில் சிறப்பாக பணிபுரிந்த காவலர் தமிழ்செல்வனுக்கு குடியரசு தினவிழாவில் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. 77வது குடியரசு தினவிழா புதுச்சேரியில் கவர்னர் கைலாசநாதன் தலைமையில் நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது.
இதில் காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய காவலர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. காரைக்கால் மாவட்டம் சைபர் பிரிவில் சிறப்பாக பணியாற்றியதற்காக சைபர்க்ரைம் காவலர் தமிழ்வேலனுக்கு டிஜிபி பதக்கம் மற்றும் லெப்டினன்ட் கவர்னர் பாராட்டுச் சான்றிதழை புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கைலாசநாதன் வழங்கினார்.
