- அனைத்து ஓய்வூதியர் சங்கம்
- கூத்தலம்
- குத்தாலம் தாசில்தார்
- மயிலாதுதுரை மாவட்டம்
- தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியதாரர்கள் சங்கம்
- தாலுகா தலைவர் சுப்பிரமணியன்
- மாவட்டம்
- இணை செயலாளர்
- தியாகராஜன்
- துணை ஜனாதிபதி
- கலியமூர்த்தி…
குத்தாலம், ஜன.28: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் தியாகராஜன், துணைத் தலைவர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் ஜெகதீசன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது தேர்தல் கால வாக்குறுதியான 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன், வட்டப் பொருளாளர் பால்ராஜ், நிர்வாகிகள் பிரேம் நசீர், வெங்கடாசலம், சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பூரணம் நன்றி கூறினார்.
