சீர்காழி, ஜன.28: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி கடைவீதி சபாநாயக முதலியார் இந்து பள்ளியில் குடியரசு தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள், நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பல்வேறு போட்டிகளில் ஈடுபட்டனர். குறிப்பாக மாணவர்கள் பிரமிடு அமைத்து சாகசத்தில் ஈடுபட்டனர்.
வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில், பேராசிரியர் நடேசன், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர் தங்கவேலு ஆலோசனையின்பேரில் பள்ளி முதல்வர் தங்கதுரை, துணை முதல்வர்கள் மாதவன், தமிழரசன், கிரிஜாபாய் உஷா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
