×

ராகி சேமியா இனிப்பு பொங்கல்

தேவையானவை:

ராகி சேமியா – 1 கப்
சிறு பருப்பு – ¼ கப்
வெல்லத் தூள் – 1½ கப்
தேங்காய் துருவல் – ¼ கப்
நெய் – ¼ கப், முந்திரி
திராட்சை – தலா 10
ஏலப்பொடி – ¼ டீஸ்பூன்

செய்முறை:

முதலில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுக்கவும். அதை எடுத்துக் கொண்டு அதே நெய்யில் சேமியாவை லேசாக வறுக்கவும். பருப்பு மூழ்கும் அளவு நீரூற்றி நன்கு வேகவிடவும். வெந்த பருப்பை சேமியாவில் சேர்த்துக் கிளறி சேமியா வெந்ததும் வெல்லத்தை கட்டியாக கரைத்து ஊற்றி கிளறவும். அதோடு தேங்காய் துருவல், ஏலப்பொடி, நெய் சேர்த்து நன்கு கிளறவும். முந்திரி, திராட்சை சேர்க்கவும். சத்தான பொங்கல் ரெடி.

Tags : Samia ,
× RELATED வெங்காய ஊறுகாய்