காதலனுக்கு வீடியோ கால் செய்து பெண் வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை

 

திருப்போரூர்: காதலனுக்கு வீடியோ கால் செய்து, பெண் வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜசேகர். இவரது மகள் அனீஷா(25). இவர், கடந்த 5 ஆண்டுகளாக ஓஎம்ஆர் சாலை ஏகாட்டூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியபடி கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வந்தார். அண்மையில் படிப்பு முடிந்து விட்ட நிலையில், பார் கவுன்சிலில் பதிவு செய்வதற்காக விண்ணப்பித்து இருந்தார். மேலும், சென்னையில் உள்ள ஒரு தனியார் சட்ட ஆலோசனை நிறுவனத்தில் வேலைக்கு செல்ல முடிவு செய்திருந்தார்.

அப்போது, சென்னை அடையாறு பகுதியில் இருந்த ஜிம் ஒன்றில் தினசரி பயிற்சிக்கு சென்று வந்தார். அப்போது, நித்தியானந்தம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் நித்தியானத்திற்கு வீடியோ காலில் போன் செய்த அனீஷா தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சொல்லி விட்டு வீடியோவை ஆன் செய்து விட்டு, தான் தங்கி இருந்த அறையின் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் பதறிப்போன நித்தியானந்தம் அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்களுக்கு சரியான குடியிருப்பு எண் தெரியாததால் ஒவ்வொரு வீடாக சோதனை செய்து பார்த்து அனீஷா தங்கி இருந்த வீட்டை கண்டுபிடித்தனர். வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அனீஷா சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், கேளம்பாக்கம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார் அனீஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், வழக்கு பதிந்து அனீஷா தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது காதலர் நிந்தியானந்தம் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: