வாஷிங்டன்: ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு இந்தியர், அமெரிக்காவின் உள்ளே சட்டவிரோதமாக நுழைய முயன்று பிடிபடுவதாக அந்நாட்டு அரசின் எல்லைப் பாதுகாப்பு அமைப்பு புள்ளிவிபரங்களில் தகவல் தெரிவித்துள்ளது. 2024ல் 85,119 இந்தியர்கள் பிடிபட்டனர். ஆறுதல் தரும் விதமாக 2025ல் இது 23,830 ஆக குறைந்தது. எனினும், சட்ட விரோதமாக நுழைவோரில் இந்தியர்கள் முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
