சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2200 உயர்ந்து ரூ.1,20,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,025-க்கும் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் தங்கம் புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 375 ரூபாய்க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
25-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000
24-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000
23-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,400
22-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600
21-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
25-1-2026- ஒரு கிராம் ரூ.65
24-1-2026- ஒரு கிராம் ரூ.365
23-1-2026- ஒரு கிராம் ரூ.345
22-1-2026- ஒரு கிராம் ரூ.340
21-1-2026- ஒரு கிராம் ரூ.345

