போடி, ஜன.26: போடி நகர் காவல் நிலைய எஸ்.ஐ கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போடி புதூர் குலசேகர பாண்டியன் தெருவை சேர்ந்த அசரப்அலி (47) என்பவர் நடத்தி பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 210 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனர். அதேபோல் போடி காமராஜர் சாலை இந்திரா காந்தி சிலை அருகே, போடி பங்கஜம் பிரஸ் 3வது தெருவை சேர்ந்த முரளி (36) என்பவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 150 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனர்.
