நத்தம், ஜன. 26: திண்டுக்கல்லில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. இதில் நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் வணிகவியல் துறை மாணவர் மணிகண்டன் கலந்து கொண்டார். ஆண்களுக்கான பொது பிரிவில் அவர் இரண்டாமிடம் பிடித்து வெற்றி பெற்றார்.
இதையடுத்து மணிகண்டனுக்கு, கலெக்டர் சரவணன் வெற்றி கேடயம் மற்றும் பரிசு தொகை ரூ.4 ஆயிரத்தை வழங்கி பாராட்டினார். சாதனை படைத்த மணிகண்டனுக்கு கல்லூரி முதல்வர் ராஜாராம் மற்றும் வணிகவியல் உள்ளிட்ட பல்வேறு துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
