- ஆத்தூர்
- நிலக்கோட்டை
- மதுரை அரசு வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கல்லூரி
- ஆத்தூர் பஞ்சாயத்து யூனியன்
நிலக்கோட்டை, ஜன. 26: ஆத்தூர் ஒன்றியத்தில் மதுரை அரசு வேளாண் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கல்லூரி மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் தங்கி களப்பணியாற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாணவர்கள் சார்பில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக கல்வி தினத்தை முன்னிட்டு மாணவ -மாணவியர்கள் மூலம் கட்டாய ஆரம்ப கல்வியின் அவசியம் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
மாணவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். பேரணியில், ‘கல்வி நமது உரிமை, கல்வி எல்லோருக்கும், குழந்தைகளின் இடம் பள்ளியில்தான், இன்று மாணவன் நாளை தலைவன், வளமான கல்வி, வலுவான இந்தியா உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
