×

காரைக்கால் ஆட்சியர் அலுவலகத்தில் 77வது குடியரசு தினம் கொண்டாட்டம்

காரைக்கால், ஜன.26: நாட்டின் சுதந்திர தினம் (ஆக.15) மற்றும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தையொட்டி ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் தேசியக்கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் ஒன்றிய அரசு அலுவலகங்கள், ரயி் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மூவர்ண மின்விளக்கு அலங்காரம் செய்யப்படும். அந்த வகையில்இந்திய நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று (26.01.2026) நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு ரம்யமாக காட்சியளிக்கிறது. ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரவிபிரகாஷ் இன்று காலை தேசியக்கொடி ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

 

 

Tags : 77th ,Republic Day ,Karaikal Ruler ,Karaikal ,Independence Day of the country ,Union ,government ,EU government ,
× RELATED குடிநீருடன் கழிவுநீர் கலப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை