9 மசோதாக்கள் நிறைவேற்றம்

தமிழக சட்டப்பேரவையில் 9 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக சட்டப்பேரவையில் 2026ம் ஆண்டு தமிழ்நாடு நீக்கறவு சட்ட மசோதா, 2026ம் ஆண்டு தமிழ்நாடு நீக்கறவு செய்தல் இரண்டாம் சட்ட மசோதா, 2026ம் ஆண்டு தமிழ்நாடு நீர்வளங்கள் சட்ட மசோதா, 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை 2026 ஜூலை மாதம் நீட்டிப்பதற்கான சட்ட மசோதா, திருச்சி, கடலூர், தேனி ஆகிய 3 சந்தை குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுகள் நீட்டிப்பதற்கான சட்ட மசோதா,

தமிழ்நாடு பிச்சையெடுப்பதை தடுத்தல் சட்டத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்ட அல்லது குணமடைந்த நபர்கள் தொடர்பாக பாகுபாடு காட்டுகிற சொல்களை நீக்கும் சட்ட மசோதா, 2026ம் ஆண்டு தமிழ்நாடு சிறப்பு பகுதி மேம்பாட்டு ஆணையச் சட்ட மசோதா, தமிழ்நாடு பள்ளிகள் கட்டண திருத்த சட்ட மசோதா, 2026ம் ஆண்டு தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் குறிப்பிட்ட பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்யும் சட்ட மசோதா ஆகிய 9 சட்ட மசோதாக்கள் ஆய்வு செய்து நிறைவேற்றப்பட்டன.

 

Related Stories: