பனிப்பொழிவால் செழித்து வளர்ந்த சிகப்பு தண்டுக்கீரை

*பெங்களூருவில் கட்டு ரூ.30க்கு விற்பனை

ராயக்கோட்டை : ராயக்கோட்டை பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள சிகப்பு தண்டுக்கீரையை வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச்சென்று, பெங்களூருவில் கட்டு ரூ.30க்கு விற்பனை செய்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியான கூலியம் கிராமத்தில் சிகப்பு தண்டுக்கீரையை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

சொட்டு நீர்ப்பாசன குழாய்களில் ஸ்பிரே ஆகும் தண்ணீரில் வளரும் சிகப்பு தண்டுக்கீரை பார்க்க பளபளவென மின்னுகிறது. இந்த கீரையை சமைத்து உண்பதால் கால்சியம் சத்து அதிகம் கிடைப்பதால், ரத்த உற்பத்தி அதிகம் ஆவதால், ரத்த சோகை உள்ளவர்களுக்கு நல்ல பலனளிப்பதாக கூறுகின்றனர்.

இந்த பகுதியில் பட்டதாரிகள் அதிக அளவில் விவசாயம் செய்வதால், அறிவியல் அறிவை பயன்படுத்தி நவீன விவசாயத்தை செய்து வருகின்றனர். மருத்துவத்திற்கு பயன்படும் ஆஸ்பராகஸ், வெள்ளரிக்காய்கள் போன்றவற்றை சாகுபடி செய்கின்றனர்.

இங்கு விளைச்சலாகும் ஆஸ்பராகஸ் கிழங்கு, மாத்திரை வெள்ளரிக்காய் மற்றும் சிகப்பு தண்டுக்கீரை போன்றவற்றை விளைவித்து பெங்களூருவுக்கு அதிக அளவில் விற்பனைக்கு அனுப்புகின்றனர். அங்கு சிகப்பு தண்டுக்கீரை கட்டு ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: