சென்னை: நடப்பாண்டில் இரண்டு முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. டெட் தேர்வுக்கு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டப்பட்டு ஜூலையில் ஒரு தேர்வும், அக்டோபரில் ஒரு தேர்வும் நடத்தப்படும். நடப்பு ஆண்டுக்கான திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டு ஜூலை மாதம் நடத்தப்படும்.
முதலமைச்சரின் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும். மாநில தகுதித் தேர்வு (செட்) ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு செப்டம்பரில் தேர்வு நடத்தப்படும். திருவள்ளூர் பல்கலை. உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூனில் தேர்வு நடத்தப்படும். அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெறுகிறது
