டெல்லி : அமெரிக்கா விதித்துள்ள 50% வரிகளால், இந்திய ஆடைத் துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரி உயர்வால் ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு வருவதால், ஆலைகள் |மூடப்படும் அபாயமும், வேலைவாய்ப்புகள் பறிபோகும் சூழலும் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதை சம்மந்தப்பட்ட துறைகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காணத் துணை குடியரசுத் தலைவருக்கு AEPC கடிதம் எழுதி உள்ளது.
