சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை ஒரு பவுன் ரூ.1,07,600க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த நாள் சவரனுக்கு ரூ.3,600 அதிகரித்து ரூ.1,11,200க்கு விற்கப்பட்டது. 21ம் தேதி காலை கிராமுக்கு ரூ.350ம் சவரனுக்கு ரூ.2800ம் உயர்ந்தது.
பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.165, சவரனுக்கு ரூ.1320 என ஒரே நாளில் சவரனுக்கு ரூ.4,120 உயர்ந்து ரூ.1,15,320க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று சரிவை சந்தித்தது. இதன் காரணமாக ஒரு சவரன் விலை ரூ.1.14 லட்சத்திற்கு கீழ் சென்றது. நேற்று காலையில் ரூ.3,600 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.800 ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,400க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,16,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.14,620க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.355க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000 உயர்ந்து ரூ. 3,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
