×

குடியரசு தினத்தன்று மதுக்கடைகள் அடைப்பு

தேனி, ஜன.24: தேனிமாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள தகவலில், தமிழக அரசு, குடியரசு தினமான நாளை மறுதினம் (ஜன.26ம் தேதி) அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் (பார்கள்) மூடியிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினங்களில் எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது.

எனவே, தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், தனியார் மதுபான கூடங்கள் (பார்கள்) எப்.எல்-1, எப்.எல்-2, எப்.எல்-3, எப்.எல்-3(ஏ), எப்.எல்-3(ஏஏ) மற்றும் எப்.எல்-11 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் நாளை மறுதினம் (ஜன.26ம் தேதி) மூடியிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது. மேலும், குடியரசு தினத்தன்று உத்தரவை மீறும் வகையில் விதிமீறல்கள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட மதுபானக் கடை பணியாளர்கள் மற்றும் உரிமைதாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

Tags : Republic Day ,Theni ,District Collector ,Ranjeet Singh ,Tamil Nadu government ,TASMAC ,
× RELATED குடிநீருடன் கழிவுநீர் கலப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை