- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்
- திண்டுக்கல்
- குறை தீர்க்கும் நாள்
- கலெக்டர்
- சரவணன்
- குறை தீர்க்கும் நாள் கூட்டம்
- திண்டுக்கல் கலெக்டர்
திண்டுக்கல், ஜன. 24: திண்டுக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜன.30ம் தேதி நடைபெறவுள்ளது. என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜன.30ம் தேதி (வெள்ளி கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் அனைத்து துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள், அரசின் மானிய திட்டங்கள், மானியத்தில் கிடைக்கும் வேளாண் கருவிகள், ஒழுங்கு முறை விற்பனைக்கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு குறித்த தொழில்நுட்பங்கள்,
பட்டுப்புழு வளர்ப்பு மூலம் கூடுதல் வருமானம் பெற ஆலோசனைகள், முன்னோடி வங்கிகள் மற்றும் கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களின் மூலமும் விவசாயிகளுக்கு கடன் சம்பந்தப்பட்ட விளக்கங்களும் வழங்குகின்றனர். கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள், விவசாயம் சார்ந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
