மத வழிபாட்டு தலங்கள் கட்டுமானத்துக்கு தடையில்லா சான்றுக்கு விலக்கு அரசாணைக்கு ஐகோர்ட் தடை

மதுரை: மதுரையை சேர்ந்த கலாநிதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மத வழிபாட்டு தலங்கள் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்று தேவையில்லை என கூறியுள்ளது. மத வழிபாட்டு தலங்கள் கட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி என்பது வெறும் நடைமுறை மட்டும் அல்ல. அது பொது அமைதி மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தை பாதுகாக்கும் ஒரு சட்ட அரண். மேலும் இந்த அரசாணை தமிழ்நாடு பஞ்சாயத்து கட்டிட விதிகளை மீறும் வகையில் உள்ளது. இந்த அரசாணைப்படி குடியிருப்பு பகுதிகளுக்குள் மத வழிபாட்டு தலங்கள் அமைவது பொதுமக்களின் நலனை பாதிக்கும். எனவே, இந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், செந்தில்குமார் ஆகியோர் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், தமிழ்நாடு அரசின் பதில் மனுவை பொறுத்து இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் கூறி விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: