- முகத்தியாகி நினைவு
- காந்தி மண்டபம்
- தமிழ் தியாகியர்கள் நினைவு
- சென்னை
- மொழிபெயர்ப்பாளர்களின் ந
- சென்னை காந்தி ஹால்
சென்னை: தமிழ்மொழியின் மீது தீராப் பற்றுக் கொண்ட மொழி தீரர்களின் ஈகையினைப் போற்றும் வகையில் தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு ஜன.25ம் தேதி சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள மொழித்தியாகிகள் நினைவிடத்தில் அமைச்சர்கள் மலர் வணக்கம் செலுத்த உள்ளனர். தமிழ்மொழியின் மீது தீராப் பற்றுக் கொண்ட மொழி தீரர்களின் ஈகையினைப் போற்றும் வகையில் கலைஞரால் காந்தி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள மொழித்தியாகிகள் நினைவு மண்டபத்தில் தீராத் தமிழ்ப் பற்றுக் கொண்ட 33 மாவட்டங்களில் உள்ள 187 தியாகிகளின் ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டுகளில் சனவரித் திங்கள் 25ஆம் நாள் மேனாள் முதலமைச்சர் கலைஞர் இந்த நினைவு மண்டபத்திற்கு வருகைபுரிந்து, மலர்வணக்கம் செலுத்தினார்கள். ஆண்டுதோறும் இந்நாளில் கட்சிப் பாகுபாடுன்றி அனைவரும் மலர் வணக்கம் செய்து வந்தனர். 2025ஆம் ஆண்டு முதல் சனவரித் திங்கள் 25ஆம் நாளை தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள மொழித் தியாகிகளின் நினைவிடத்தில் தமிழ் வளர்ச்சித் துறையால் மலர் வணக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள மொழித்தியாகிகள் நினைவிடத்தில் அமைச்சர்கள் காலை 9.30 மணிக்கு மலர் வணக்கம் செய்ய உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது.
