காதல் விவகாரத்தில் மோதல் கோவை தனியார் கல்லூரியில் மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து: மாணவன் கைது

கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 17 வயதான இளம்பெண் தகவல் தொழில் நுட்பம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 18 வயது மாணவருக்கும் நட்பு இருந்தது. இந்த நிலையில், மாணவர் தன்னுடன் பழகிய மாணவியை காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. அதேசமயம் அந்த மாணவி, அதே கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவருடனும் சகஜமாக பேசியுள்ளார். இது தொடர்பாக காதலர், அந்த மாணவியை கண்டித்தார். என்னை தவிர வேறு யாருடனும் நீ ஜாலியாக பேசக்கூடாது என எச்சரித்தார். ஆனால், அதை மாணவி கேட்கவில்லை.

தொடர்ந்து அவர் தனது நண்பரிடம் பேசியுள்ளார். இதில் கோபமடைந்த மாணவர், நேற்று மாணவியிடம் வாக்குவாதம் செய்தார். தன் எச்சரிக்கையை மீறி எப்படி நீ அவனிடம் பேசலாம் என கேட்டு அவர் கத்தியால் மாணவியின் கழுத்து, கை, கால்களில் சரமாரியாக குத்தியுள்ளார். அவரது அலறலை கேட்டு கல்லூரியில் இருந்த சக மாணவர்கள் அந்த மாணவரை தடுத்து அவரிடம் இருந்த கத்தியை பறித்தனர். படுகாயமடைந்த மாணவியை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறந்து சரவணம்பட்டி போலீசார் வந்து விசாரணை நடத்தி, வழக்கு பதிந்து அந்த மாணவரை கைது செய்தனர்.

Related Stories: