குளச்சல், ஜன.23: வெள்ளிச்சந்ைத அருகே முட்டம் ஜார்ஜியார் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (48). மீனவர். இவருக்கும் அம்மாண்டிவிளை இளையான்விளை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி கியூமன்(24) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக தகராறு இருந்து வந்துள்ளது. தற்போது கியூமன் முட்டம் ஜேம்ஸ் நகரில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று பார்த்திபன் முட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு சென்ற கியூமன் மற்றும் அவரது நண்பர் கோகுல்(19) ஆகியோர் வெட்டுகத்தியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து பார்த்திபன் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மீனவருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கியூமன் மற்றும் கோகுலை கைது செய்தனர்.
