×

நெல்லை அருகே ஆம்புலன்ஸ், சிலிண்டர் லாரி மோதி டிரைவர் படுகாயம்

நெல்லை, ஜன.23: தென்காசியை சேர்ந்தவர் விஷ்ணு (28). இவர் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலையில் நாகர்கோவிலுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்றுவிட்டு, மீண்டும் அங்கிருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு தென்காசிக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டி வந்தார். பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் அருகே ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தபோது அங்கு சமையல் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியும், ஆம்புலன்சும் மோதிக்கொண்டன. இதில் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் விஷ்ணு படுகாயமடைந்தார். இதனையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Nellai ,Vishnu ,Tenkasi ,Nagercoil ,
× RELATED குடிநீருடன் கழிவுநீர் கலப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை