காரைக்கால், ஜன. 22: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சட்ட பேரவையில் காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அம்மனுவில் மகளிருக்கான உரிமை தொகை சிகப்பு அட்டைதாரர்களுக்கு ரூ.2500 என்று உயர்த்தியமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் மஞ்சள் அட்டைதாரர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல. இவர்களும் ஏழைகள் இருக்கின்றார்கள்.
எனவே அந்த மஞ்சள் அட்டை வைத்திருக்கக்கூடிய தகுதி வாய்ந்தவர்களுக்கும் ரூ.2500 வழங்க வேண்டும். இல்லையென்றால் குறைந்தபட்சமாக ரூ.1000 முதல் கட்டமாக வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். கோரிக்கைகளை கேட்டறிந்த முதல்வர் ரங்கசாமி கண்டிப்பாக பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.
