×

மயிலாடுதுறை சாலை பாதுகாப்பு வார விழாவில் முதலுதவி பயிற்சி

மயிலாடுதுறை, ஜன. 22: மயிலாடுதுறையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நெடுஞ்சாலை துறை போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. அப்போது வாகன ஓட்டிகளுக்கும், பொது மக்களுக்கும் வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்களுக்கும், போக்குவரத்து காவல் துறையினருக்கும் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலர் கதிர்வேல் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக சிசிசி சமுதாயக் கல்லூரி நிறுவனர் தலைவரும்,

முதலுதவி பயிற்றுநருமான சிசிசி காமேஷ் உயிர்காக்கும் சிபிஆர் சிகிச்சை குறித்தும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்வது குறித்தும் செயல் விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமார், நெடுஞ்சாலைத்துறை கூடுதல் இயக்குனர் சூரிய நாராயணன் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மணியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் சண்முகநாதன், மற்றும் பிற தனியார் ஓட்டுனர் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

 

Tags : Mayiladuthurai Road Safety Week festival ,Mayiladuthurai ,Road Safety Week ,Regional Transport Office ,Highways Department ,Traffic Police ,Traffic Police… ,
× RELATED குடிநீருடன் கழிவுநீர் கலப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை